Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணமானது சோயூஸ் விண்கலம்

In அறிவியல்
Updated: 09:56 GMT, Mar 22, 2018 | Published: 09:50 GMT, Mar 22, 2018 |
0 Comments
1051
This post was written by : Elakkiya

விண்வெளி வீரர்கள் குழுவுடனான சோயூஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணமாகியுள்ளது.

1960களில் கோரொலெவ் வடிவமைப்பு மையத்தால் சோவியத் விண்வெளித் திட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலம் நேற்று (புதன்கிழமை) கஸகஸ்தானின் பைக்கோனூர் கொஸ்மோட்ரோம் விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த விண்கலம் நாளை வெள்ளிக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்று கூறப்படுகின்றது.

அமெரிக்க நாட்டின் நாசா அமைப்புக்கும் ரோசவியகொஸ்மோஸ் அமைப்புக்கும் இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், அனைத்துலக விண்வெளி நிலையமானது ஒரு ஆய்வகமாகவும், விண்ணியல் நோக்கமாகவும் தொழிலகமாகவும் செயல்பட உருவாக்கப்பட்டது.

இது நிலவு, செவ்வாய் மற்றும் குறுங்கோள்களை நோக்கி செலுத்தப்படும் எதிர்கால விண்கலன்களுக்கு அணுகு தலமாகவும், அவற்றை பேணும் இடமாகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

2010ஆம் ஆண்டின் அமெரிக்க விண் கொள்கையில் இந்த அனைத்துலக விண்வெளி நிலையத்தை பொருளாதார, அரசியல் மற்றும் கல்விக்காகவும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg