Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Snowball Fight விளையாட்டில் பேரானந்தம் காணும் கலிஃபோர்னிய மக்கள்

In
Updated: 10:03 GMT, Mar 22, 2018 | Published: 10:03 GMT, Mar 22, 2018 |
0 Comments
1064
This post was written by : Elakkiya

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வெண்போர்வையென போர்த்தப்பட்டுள்ள பணித்திடல்கள் அந்த நாட்டு மக்களின் பிரதான பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது.

சில அங்குலங்கள் அளவு படிந்திருக்கும் இந்த பனித்துகள்களை அள்ளி தமக்கு அருகிலிருப்போர் மீது வீசுவதை பேரானந்தமாக எண்ணி மகிழ்கின்றனர் குறித்த பகுதி மக்கள்.

இவ்வாறாக மக்களின் அதகிகப்பட்ச பொழுதுபோக்காக மாறியிருக்கும் இந்த விளையாட்டினால், அமெரிக்காவின் தலைநகரின் கிளையாக குறித்த பகுதியில் உள்ள சிறப்பங்காடி அப்பகுதி மக்களுக்கான விளையாட்டு மைதானமாக மாறியிருக்கிறது.

பனி உருளைகளை உருவாக்கி தங்களுக்கான சிறந்த இலக்கு யார் என்பதை தெரிவுசெய்து அவர்கள் மேல் எறியும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளதாக தெரிவிக்கிறார் குறித்த Snowball Fight விளையாட்டின் வொஷிங்டன் மாநிலத்துக்கான இணை நிறுவுனர் மைக்கேல் லிபின்.

காயத்தினை ஏற்படுத்தும் வகையில் காற்றிலே கடுமையாக வீசும் பனியின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மாற்றுவழிகளை சிலர் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு தானும் மாற்று வழியினை பயன்படுத்தியுள்ளதாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சென்றிருந்த சுற்றுலா பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும் கிழக்கு அமெரிக்காவின் நான்காவது மிகப்பெரிய புயல் மிகுந்த பனிப்பொழிவுடன் வீசியதாகவும் இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg