Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘2050’இல் 3 பில்லியன் மக்கள் நீரின்மையால் பாதிக்கும் வாய்ப்பு

In இலங்கை
Updated: 11:37 GMT, Mar 22, 2018 | Published: 11:30 GMT, Mar 22, 2018 |
0 Comments
1097
This post was written by : Yuganthini

நீரின்மையால் இதுவரை 20 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் 2050ஆம் ஆண்டு 3 பில்லியன் மக்கள் நீரின்மையால் பாதிக்கப்படுவார்களென, யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் பிரதிக் காரியாலய பணிப்பாளர் அலேனா தன்ஸே தெரிவித்துள்ளார்.

உலக நீர் தினத்தை முன்னிட்டு யுஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் பாம் பவுண்டேனச் நிறுவனம், மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தற்போது நீரின்மையால் 1.8 மில்லியன் மக்கள் குடிப்பதற்கு தகுந்த நீரைப் பயன்படுத்தாத நிலைமை காணப்படுகின்றது.

நீர் தொடர்பில் உலகத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம், மற்றும் உலகத்தில் ஏற்படுள்ள சர்ச்சைகள் தொடர்பில் நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். இவற்றுள் வரட்சியும், நீர் மாசடைவதும் மிக முக்கியமான அம்சமாகக் காணப்படுகின்றது.

நீர் உடலுக்கு மாத்திரமின்றி வாழ்வாதாரத்திற்கும் தேவையானது என்பதை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

மேலும் பல கிணறுகளில் நீர் காணப்பட்டாலும் அங்குள்ள நீர் அருந்துவதற்கு ஏற்றதாகக் காணப்படவில்லை. யு.எஸ்.எயிட் நிறுவனம் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய 15 மில்லியன் மக்களுக்கு நீர் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த வருடம் 15,000 இலங்கை மக்கள் எமது நிறுவனத்தினால் நீர் தொடர்பான நன்மைகளைப் பெற்றுள்ளார்கள்.

எமது இந்த செயற்றிட்டம் இலங்கையில் இருக்கின்ற ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்றதையிட்டு நான் பெருமையடைகின்றேன்.

இலங்கையில் யு.எஸ்.எயிட் நிறுவனம் 1970 ஆம் ஆண்டிலிருந்து நீர் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. எமது நிறுவனம் மக்களுக்கு தூய்மையான நீரைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன்தான் செயற்பட்டு வருகின்றது.

அவற்றுள் மழை நீர் சேகரிப்பு, குழாய் மூலமான நீர் வழங்கல் போன்ற செயற்றிட்டங்களை மேற்கொள்கின்றோம்.

இலங்கையில் நாம் றெயின்கோ மற்றும் பாம் ஆகிய 2 நிறுவனங்களுடாகவே எமது திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இவற்றால் நீரைச் சேமிக்கும் செயற்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றால் மக்களுக்கு சிறந்த பயனை பெற்றுக்கொள்ளகூடிய வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg