Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லதம் கொடுத்த பரிசு: புதிய மைல்கல்லை எட்டி பிராட் சாதனை

In கிாிக்கட்
Updated: 12:50 GMT, Mar 22, 2018 | Published: 12:50 GMT, Mar 22, 2018 |
0 Comments
1119
This post was written by : Anojkiyan

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் டொம் லதமின் விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

அத்தோடு, வரலாற்று சிறப்புமிக்க பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.

31 வயதான ஸ்டூவர்ட் பிராட், 115 டெஸ்ட் போட்டிகளில், 209 இன்னிங்சுகளில் விளையாடி இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதுதவிர சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய 15வது வீரர் என்ற பெருமையும், இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் பிராட் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் அதிக விக்கெட்டுகளை வீழத்திய பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg