Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயனாளர்களிடம் மன்னிப்பு கோரினார் பேஸ்புக் ஸ்தாபகர்

In
Updated: 12:46 GMT, Mar 24, 2018 | Published: 06:26 GMT, Mar 23, 2018 |
0 Comments
1070
This post was written by : Elakkiya

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கின் தலைமை நிர்வாகி மார்க் ஸூக்கர் பேர்க் தனது 50 மில்லியன் பயனாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். எதற்காக எனில் குறித்த 50 மில்லியன் பயனாளர்களின் தரவுகளை அரசியல் ஆலோசனை நிறுவனம் ஒன்று பெற்றுக் கொள்வதற்கு தனது நிறுவனம் வழியேற்படுத்திக் கொடுத்ததாக தெரிவிக்கிறார்.

இதன்காரணமாக தனது மில்லியன் கணக்கான பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள ஸூக்கர்பேர்க் இதுபோன்ற தவறுகள் மேலும் இடம்பெறாத வகையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்படும் கேம்பிறிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் பேஸ்புக் இணையத்தளத்திலிருந்து பெற்ற தரவுகளை தனது அரசியல் வாடிக்கையாளர்கள் சார்பில் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகின்றது.

இதன்மூலம் நம்பிக்கை மீறல் ஒன்று இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ள மார்க் ஸூக்கர்பேர்க், இந்த விடயத்தில் தான் மிகுந்த வருத்தமடைவதாகவும் மேற்படி தரவுகளை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேஸ்புக்கில் பயனாளர்களின் தரவுகளை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதாகவும் அவ்வாறு பாதுகாக்க தவறும் பட்சத்தில் சேவையாற்றுவதற்கு தாம் தகுதியற்றவர்கள் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் உருவரால் அனுப்பப்பட்ட தரவுகள் மற்றும் ஏனைய தனிப்பட்ட தரவுகளை அடைவதற்கு அனுமதி கோருதல் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg