Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்த தமிழச்சி!

In விளையாட்டு
Updated: 06:20 GMT, Mar 23, 2018 | Published: 06:20 GMT, Mar 23, 2018 |
0 Comments
1188
This post was written by : Litharsan

ஜூனியர் உலகக் கிண்ண துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனையான இளவேனில் வளரிவான் தங்கம் வென்றதுடன் அதிக புள்ளிகளைப் பெற்று உலக சாதனையையும் படைத்துள்ளார்.

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் ஆஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற 10 மீற்றர் எயார் ரைஃபிள் பிரிவு போட்டியில் வெற்றிபெற்று இளவேனில் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் தகுதிச் சுற்றில் 631.4 புள்ளிகளைப் பெற்ற அவர் அதிக புள்ளிகளைப் பெற்றவர் என்ற புதிய உலக சாதனையையும் படைத்தார்.

முன்னர் ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்த குழுப் பிரிவில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு இது இரண்டாவது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg