Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பேத்கர் குறித்த சர்ச்சை – விளக்கமளிக்கும் பாண்டியா

In கிாிக்கட்
Updated: 06:53 GMT, Mar 23, 2018 | Published: 06:53 GMT, Mar 23, 2018 |
0 Comments
1141
This post was written by : Litharsan

அம்பேத்கரை அவமானப்படுத்தும் விதத்தில் தான் டுவிட் எதுவும் செய்யவில்லை என இந்திய அணி வீரர் பாண்டியா தெரிவித்துள்ளார். அத்துடன் தனது பெயரில் இயங்கும் போலியான டுவிட்டர் கணக்கின் மூலமே அப்படியொரு பதிவு இடம்பெற்றுள்ளதாகவும் அவர்  விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர், 26 ஆம் திகதி அம்பேத்கருக்கு எதிராக டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டதாக பாண்டியா மீது தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வழக்குத் தொடர எஸ்.சி/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பாண்டியா விளக்கமளிக்கையில், “அம்பேத்கரை அவமானப்படுத்தும் விதத்தில் நான் டுவிட்டரில் எந்தப்பதிவையும் வெளியிடவில்லை. எனது பெயரில் இயங்கும் போலியான டுவிட்டர் கணக்குவழியாகவே அப்படியானதொரு பதிவு வெளியாகியுள்ளது. நான் சமூகத்தை இழிவுபடுத்தும் விதத்தில் செயற்படுவதில்லை. இது குறித்து நான் நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் வெளியான குறித்த டுவிட்டர் பதிவில், “எந்த அம்பேத்கர்? அரசியல் சாசனத்தை வகுத்தவரா? அல்லது இட ஒதுக்கீடு என்ற நோயை பரப்பியவரா” என்று கேள்வியெழுப்பிதாக அந்த பதிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg