Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூதாட்டம் உண்மையில்லையென அறிவிப்பு: எனது தேசப்பற்று மீதான சந்தேகத்தால் மனமுடைந்தேன் – சமி

In கிாிக்கட்
Updated: 07:35 GMT, Mar 23, 2018 | Published: 07:32 GMT, Mar 23, 2018 |
0 Comments
1204
This post was written by : Litharsan

தன்மீதான சூதாட்ட புகார் உண்மையில்லையென கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில் தான் மன நிம்மதி அடைந்துள்ளதாக இந்திய கிரி்ககெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஹமட் ஷமி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது தேசபக்தி மீது கேள்வியெழுந்தமையை அடுத்து தான் மிகவும் வருத்தமடைந்ததாக ஷமி தனது கவலையை வெளியிட்டார். நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், சூதாட்டங்களில் ஈடுபடுவதாகவும் ஷமியின் மனைவி அண்மையில் பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து ஷமியின் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய இந்திய கிரிக்கெட் வாரியம், சூதாட்ட புகார் தொடர்பில் விசாரணை நடத்தியது. எனினும் குறித்த விசாரணையின் பின்னர் அவர் சூதாட்டங்களில் ஈடுபடவில்லை என்று அறிவித்துள்ள கிரிக்கெட் வாரியம், ஒப்பந்தத்தில் மீளவும் சேர்த்துள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஷமி, “கடந்த 15 நாட்களாக என் வாழ்வில் பல விஷயங்கள் நடந்துவிட்டன. எனது தேசபக்தி மீது கேள்வி எழுப்பப்பட்டபோது நான் மிகவும் வேதனையடைந்தேன். ஆனாலும் கிரிக்கெட் வாரியத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது.

நான் மீண்டும் களத்தில் சிறப்பாக செயற்பட்வுள்ளேன். என் மீதான ஏனைய குற்றச்சாட்டுக்களிலிருந்தும் நான் மீண்டுவருவேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg