Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கறுப்பினத்தவர் மீது துப்பாக்கிச்சூடு: கலிபோர்னியாவில் ஆர்ப்பாட்டம்

In
Updated: 08:06 GMT, Mar 23, 2018 | Published: 08:06 GMT, Mar 23, 2018 |
0 Comments
1123
This post was written by : Suganthini

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஸக்கிரமென்டோ (Sacramento) பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கையில் எந்தவித ஆயுதமுமின்றி அலைபேசியை மாத்திரம் வைத்திருந்த 22 வயதான ஸ்டீபன் கிளார்க்கை (Stephon Clark,), பொலிஸார் சுட்டுக்கொன்றமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, குறித்த நபர் மீது 20 தடவைகள் பொலிஸார் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.

கறுப்பின மக்களின் மீதான பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் வழமையாகிவிட்டதாகவும், ஆர்ப்பாட்டக்கார்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg