Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீ இராமகிருஷ்ணரின் ஜனன தினத்தை முன்னிட்டு ரதபவனி

In இலங்கை
Updated: 09:52 GMT, Mar 23, 2018 | Published: 09:52 GMT, Mar 23, 2018 |
0 Comments
1082
This post was written by : poovannan

அம்பாறை – காரைதீவில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மிசன் சாரதா மகளிர் இல்லத்தில், பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் 183ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) ரதபவனியொன்று இடம்பெற்றது.

காரைதீவு இந்து சமய அபிவிருத்திச் சங்கத்தாலும் காரைதீவு பொதுமக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்விற்கு, காரைதீவு இந்து சமய அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.மணிமறான் தலைமைதாங்கினார்.

இந்நிகழ்வுக்கு பிரதமஅதிதியாக கொழும்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சர்வருபானந்த மகராஜ் மற்றும் சிறப்பு அதிதி மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பொறுப்பாளர் ஸ்ரீமத் சுவாமி பிரபுபிரேமானந்த மகராஜ் ஆகியோரை காரைதீவு ஸ்ரீ இராமகிருஷ்ண மிசன் சாரதா மகளிர் இல்லத்துச் சிறுமிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளுடன் ஆரம்பமான ரதபவனியில், பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை ஸ்ரீ சாரதாமணிதேவியார் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவப் படங்கள் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டன.

இந்நிகழ்வில் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி, காரைதீவு ஸ்ரீ இராம கிருஷ்ண மிசன் பெண்கள் பாடசாலை, சண்முகா மகாவித்தியாலயம், காரைதீவு ஸ்ரீ இராம கிருஷ்ண மிசன் ஆண்கள் பாடசாலை, கண்ணகி இந்து வித்தியாலயம், விஷ்ணு வித்தியாலயம், விக்னேஸ்வரா வித்தியாலயம், ஸ்ரீ இராமகிருஷ்ண மிசன் சாரதா மகளிர் இல்லம் ஆகியவற்றினுடைய மாணவ – மாணவிகள் மற்றும் பொது அமைப்புக்கள் உட்பட காரைதீவு பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg