Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லியை காதலித்த பெண்ணுக்கு எச்சரிக்கை விடுத்த ரசிகர்

In விளையாட்டு
Updated: 09:36 GMT, Mar 23, 2018 | Published: 09:36 GMT, Mar 23, 2018 |
0 Comments
1759
This post was written by : Litharsan

இந்திய வீரர் விராட் கோஹ்லியை ஒரு தலையாக காதலித்த இங்கிலாந்தின் பெண்கள் அணி வீராங்கனையான டானியல்லே வியாட்டிற்கு கோஹ்லியின் ரசிகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியொன்றிற்காகவும், நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவும் நேற்று (வியாழக்கிழைமை) இந்தியாவுக்கு வருகை தந்திருந்த வியாட், மும்பை நகரைச் சுற்றிப்பார்த்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

அதனைப் பார்த்த கோஹ்லியின் ரசிகர் ஒருவர் விராட் கோஹ்லியின் வீட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளீர்கள் என கூகுள் வரைபடத்தை வெளியிட்டார். அத்துடன் “அனுஷ்கா சர்மா கவனம். டானியல்லே வியாட் பத்திரமாக இருங்கள்” என்று வியாட்டிற்கு பதில் டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட்டர் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

டானியல்லே வியாட், விராட் கோஹ்லியை பலகாலமாக காதலித்து வந்ததுடன், ஒரு தடவை தனது டுவிட்டரில் “விராட் கோஹ்லி என்னை திருமணம் செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg