Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டு எதிரணியின் உண்மையான இலக்கு பிரதமரல்ல: அர்ஜுன

In இலங்கை
Updated: 09:41 GMT, Mar 23, 2018 | Published: 09:41 GMT, Mar 23, 2018 |
0 Comments
1123
This post was written by : Risha

நம்பிக்கையில்லா பிரேரணையின் உண்மையான இலக்கு பிரதமர் இல்லை என்றும் மாறாக ஜனாதிபதியையும், சபாநாயகரையுமே கூட்டு எதிரணி குறி வைத்துள்ளது என்றும் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியல் எதிர்காலம் அற்றவர்களாலேயே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி முடியாத அவர்கள் அடுத்த பொதுத் தேர்தலினூடாக குறுக்கு வழியில் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு எதிர்பார்த்துள்ளனர். இது குறித்த முழு விபரங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு எதிரான நல்லாட்சி அரசாங்கத்தின் மந்தமான செயற்பாடுகள் ஏமாற்றமளிப்பதாகவும்” அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg