Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலகுவாக கிடைக்கக்கூடிய வளங்களை பயன்படுத்த வேண்டும் :சோ.ரங்கநாதன்

In இலங்கை
Updated: 10:36 GMT, Mar 23, 2018 | Published: 10:36 GMT, Mar 23, 2018 |
0 Comments
1070
This post was written by : poovannan

எமது பிரதேசத்தை பொறுத்தவரையில் மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய பொருட்களை கவனத்தில் கொண்டு அதன் மூலம் இலகுவான முறையில் வருமானத்தினை ஈட்டக்கூடிய விதத்தில் அங்குள்ள வளங்களை பயன்படுத்த வேண்டும் என நாவிதன்வெளி பிரதேச செயலாயர் சோ.ரங்கநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு- நாவிதன்வெளியில் புதிதாக அமைக்கப்பட்ட நெசவு நிலையத்தின் ஆரம்ப நிகழ்வின் போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இங்கு மிகவும் எளிதான முறையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வளங்களை சரியான முறையில் பயன்படுத்த நினைத்தால் எமது பிரதேச மக்களின் எதிர்காலம் சுபீட்ஷம் மிக்கதாக அமையும்.

இந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் அனைவரும் எதிர்காலத்தில் சிறந்ததொருவகையில் சுயதொழில் மூலம் முன்னேற்றம் கண்டு அவர்களும் அவர்களது குடும்பங்களும் அபிவிருத்தியை காண்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இவ்வாறான செயற்பாட்டினை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் இங்குள்ள பொது மக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் உள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் விசேட அதிதியாக கிராமிய கைத்தொழில் ஆணையாளர் றிஸ்வாணி றியாஸ், நாவிதன்வெளி சமூகசேவை உத்தியோகத்தர் அமிர்தசங்கர், பயிற்சி பெறும் மாணவிகள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆலயத் தலைர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg