Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவை துவம்சம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி!

In கிாிக்கட்
Updated: 10:13 GMT, Mar 23, 2018 | Published: 10:12 GMT, Mar 23, 2018 |
0 Comments
1148
This post was written by : Litharsan

அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ரி-20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ரி-20 தொடரில் இந்தியா, அவுஸ்ரெலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் விளையாடுகின்றன. இந்தத் தொடரின் 2 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை, பிரபோன்ஸ் ஸ்ரேடியத்தில் மோதின.

இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்ரேலிய அணி சார்பில், றிச்சேல் 65 ஓட்டங்களையும், அலிஷா ஹீலி 31 ஓட்டங்களையும் மற்றும் அஷ்லெய் காட்னர் 28 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் ஜெனி 3 விக்கெட்டுகளையும், நடாலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு டானியல்லே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

பதிலுக்கு 150 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து தனது வெற்றியிலக்கை அடைந்தது. அந்தவகையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில், நடாலி ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் மற்றும் டமி பியமொன்ட் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மெகான் மற்றும் டெலிஸா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகியாக நடாலி ஸ்கிவர் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg