Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வியட்நாமில் தீ விபத்து: 13 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 10:47 GMT, Mar 23, 2018 | Published: 10:47 GMT, Mar 23, 2018 |
0 Comments
1079
This post was written by : Suganthini

வியட்நாமின் ஹோ ஸீ மின்ங்ஹ் (Ho Chi Minh) நகரிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் பரவிய தீ காரணமாக, 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி குடியிருப்புத்தொகுதியின் அடித்தளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பட்ட தீ, விரைவாக குடியிருப்புத் தொகுதியில் பரவியது.

மேலும், குடியிருப்புத்தொகுதியில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தீயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் நடவடிக்கையில் தீயணைப்புப் படைவீரர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புகையை சுவாசித்தன் காரணமாக பெரும்பாலோனோர் உயிரிழந்துள்ள அதேவேளை, தீ விபத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் பலர் யன்னல்கள் ஊடாகக் குதித்த நிலையிலும் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg