Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாமலின் அமெரிக்க விஜயம் தடைப்பட்டது ஏன்?

In இலங்கை
Updated: 11:04 GMT, Mar 23, 2018 | Published: 10:47 GMT, Mar 23, 2018 |
0 Comments
1288
This post was written by : Risha

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயம் தடைப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

இலங்கைக்குள் அவருக்கு எதிராக எழுந்துள்ள நிதி மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாகவே அவரது அமெரிக்க விஜயம் தடைசெய்யப்பட்டதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிதி மோசடிகளில் சிக்கியுள்ள நாமல் ராஜபக்ஷவின் பெயர் குடிவரவு மற்றும் குடியகல்வு கண்காணிப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, அவரது விஜயத்தை தடை செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

உறவினர் ஒருவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்பதற்காக மொஸ்கோவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிக்க முற்பட்ட நாமல் ராஜபக்ஷவை, எமிரேட்ஸ் எயர்லைன் விமான சேவை நிறுவன அதிகாரிகள் நேற்று தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து அவர் நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg