Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமரை எதிர்த்தவர்களுக்கு நேர்ந்த கதி! – அமைச்சு பதவிகள் பறிபோகும் ஆபத்து

In இலங்கை
Updated: 15:00 GMT, Mar 23, 2018 | Published: 11:14 GMT, Mar 23, 2018 |
0 Comments
2255
This post was written by : Risha

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டவர்களை தொடர்ந்தும் அரசாங்கத்தில் பதவி வகிக்க இடமளிக்க முடியாது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறு கையெழுத்திட்டவர்கள் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் ஐ.தே.க.-விற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான இணக்கப்பாடு முறிவடைந்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களான டி.பி.ஏக்கநாயக்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, பிரசன்ன புஞ்சிநிலமே, காதர் மஸ்தான் உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்கள் தொடர்பாகவும் ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கையெடுக்க தீர்மானித்துள்ள பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg