Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு!

In இலங்கை
Updated: 11:31 GMT, Mar 23, 2018 | Published: 11:31 GMT, Mar 23, 2018 |
0 Comments
1666
This post was written by : Vithushagan

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ரூபாய் நாணயப்பெறுமதி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் விலை அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வாகன இறக்குமதியில் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற ஜப்பானிய யென்னின் பெறுமதி வெகுவாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக நேற்றைய தினத்தை பார்க்கிலும் இன்றைய தினம் யென்னின் பெறுமதி 10 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் வாகனத்தின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg