Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உண்மைகளை போட்டுடைக்கும் நடிகை: அதிர்ச்சியில் சினிமா உலகம்!

In கிசு கிசு
Updated: 11:31 GMT, Mar 25, 2018 | Published: 11:31 GMT, Mar 25, 2018 |
0 Comments
1058
This post was written by : Ravivarman

நடிகை ஒருவர் அடுத்தடுத்து உண்மைகளை வெளிப்படையாக, துணிச்சலாக தெரிவித்து வருவதால் இந்திய சினிமாத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் கூலான தலைவரின் பெயரில் வெளியான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த நடிகை பின்னர் உச்ச நடிகருடன் ஒரு படத்தில் நடித்து பிரபலமானாராம்.

அவ்வப்போது தமிழ் சினிமாவில் தலைகாட்டும் அந்த நடிகை பெரும்பாலும் ஹிந்தி படங்களிலேயே அதிக அளவில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் கூட அந்த நாயகி நடித்த ஒரு சமூக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், பீச்சில் தனது நண்பருடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுச் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

பின்னர், திரையுலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருக்கிறது என்றும், நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினாராம்.

கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை என்றும், கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றும் கூறிய அந்த நடிகை சமீபத்தில் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாகவும், அவர் பிரபலமான நடிகர் என்றும் கூறி வந்தாராம்.

இவ்வாறு நாயகி உண்மைகளை போட்டுடைப்பதால் கோலிவுட், டோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg