Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்

In
Updated: 11:12 GMT, Mar 26, 2018 | Published: 09:48 GMT, Mar 26, 2018 |
0 Comments
1073
This post was written by : Velauthapillai Kapilan

திரைப்படங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்களோடு மக்களாக பின்னிப்பிணைந்துள்ள நிலையில் ‘சத்தியயூகம்’ எனும் முழு நீளத் திரைப்படம் வெளியீட்டு விழா  மட்.தேத்தாத்தீவூ சிவகலை வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஈழத்து சினிமாவும் வளர்ச்சியை இவ்வாறன கலைஞர்களின் படைப்புகள் இன்றுவரை அழியாது பறை சார்ரிநிக்கும் அதேவேளை  தமிழ் இளைஞர்கள் அவ்வப்போது குறுந்திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டுக்கூத்து, நாடகம், கவிதை, கட்டுரை, பாடல், கோலாட்டம், கும்மி, என பல கிராமியக் கலைகளை தன்னகத்தே கொண்டு வளர்த்துவரும் தேத்தாத்தீவூக்கிராமத்தின் கலைஞன்  முழு நீளத் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி நடித்துள்ளார்.

ஆசிரியராகவும்  இளம் சமூதாயத்தினருக்கு  நல்லதொரு கலைஞாகவும் திகழ்ந்துவரும்  அ.ஈழவேந்தன் என்பவர் விவசாயம், விஞ்ஞானம், எதிர் காலத்தில் விவசாயத்தில் சாதிக்க வேண்டிய விடையங்கள், உள்ளிட்ட சிந்தனையைத் தூண்டக் கூடிய வித்தில் இத்திரைப்டத்தை தாயாரித்துள்ளார்.

மேலும்  த.விமலநாதனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சி.அமலநாதன், நிதியமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மூ.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன், கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார முன்னாள் கலாசார பீடாதிபதி க.இராஜேந்திரம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் மற்றும், கலைஞர்கள், அரச அதிகாரிகள், கிராம பொது மக்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதுமாத்திரமின்றி ஈழவேந்தனின் இந்த முயற்சி எதிர்காலய இளைஞர் யூவதிகளுக்கு ஓர சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் ஓர் புதிய முயற்சியாகும்.

கிராமியக் கலைத்துறையில் மிளிர்கின்ற இக்கிராமம் இன்றிலிருந்து திரைப்படத்துறையிலும் மிளிர்கின்றது என இந்நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg