Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் வன்முறை: நால்வர் படுகாயம்

In
Updated: 09:15 GMT, Mar 26, 2018 | Published: 09:15 GMT, Mar 26, 2018 |
0 Comments
1109
This post was written by : Suganthini

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் கத்திக்குத்துச் சம்பவங்களில், பொலிஸ் அதிகாரியொருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

வேல்ஸ் மற்றும் மன்செஸ்டர் பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

வேல்ஸின் கார்டிஃப் பகுதியில்  இடம்பெற்ற கத்திக்குத்தில், ஆண்கள் மூவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மன்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இப்பொலிஸ் அதிகாரியின் முகத்திலும் தோள்பட்டையிலும் வாள்வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 23 வயதுடைய ஒருவரைக் கைதுசெய்து விசாரித்து வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg