Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பக்திப்பாடல்கள் வெளியீடு

In ஆன்மீகம்
Updated: 04:44 GMT, Mar 27, 2018 | Published: 04:10 GMT, Mar 27, 2018 |
0 Comments
1161
This post was written by : poovannan

மட்டக்களப்பு – கிரான்குளத்தில், ஸ்ரீ முருகன் ஆலயம் தொடர்பில் பாடப்பட்டுள்ள “வேல்நாதம் பக்திப்பாடல்கள்” இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தின் தலைவர் அ.தங்கவேல் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.அமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த வெளியீட்டு நிகழ்வில் தொழிலதிபர் கா.செந்தில்குமார் முதல் இறுவெட்டினைப் பெற்று இறுவெட்டு வெளியீட்டை ஆரம்பித்துவைத்தார்.

கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் ஆலயத்தின் புகழைப்பாடும் இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ள இந்த இறுவெட்டினை பிரசித்த நொத்தாரிசும் சமாதான நீதவானுமான பெ.சிவசுந்தரத்தின் தயாரிப்பில், ஆலயத்தின் திருப்பணிச்சபை வெளியிட்டுள்ளது.

இந்த இறுவெட்டுக்கான பாடலை கிரான்குளத்தினை சேர்ந்த இளம் கலைஞரும் கவிஞருமான ஜீவானந்தம் எழில்வண்ணன் எழுதியுள்ளதுடன் கொழும்பினை சேர்ந்த வி.செந்தூரன் இசையமைத்துள்ளார்.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ செ.கு.சுப்ரமணிய குருக்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன், கிழக்கு மாகாண ஆளுநர் செயலக உதவி செயலாளர் உ.சிவராசா, மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ந.கிருஷ்ணபிள்ளை, கல்குடா வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg