Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலேசியாவில் பொய்யான செய்திகளை வெளியிட்டால் 10 ஆண்டுகள் சிறை!

In
Updated: 05:25 GMT, Mar 27, 2018 | Published: 05:11 GMT, Mar 27, 2018 |
0 Comments
1147
This post was written by : Anojkiyan

பொய்யான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் புதிய சட்டமொன்றை, மலேசியா அரசு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்த சட்டமூலம் ஒன்றை பிரதமர் நஜப் ரசாக் அரசு நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து விரிவான ஆராய்வுகள், கலந்துரையாடல்கள் இடம்பெற்றதன் பின் இச்சட்டம் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான பொய்யான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என குறித்த சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

பொய்யான செய்தி என்பது செய்தி, தகவல், அறிக்கை, காணொளி, ஒலிப்பதிவு போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்தை தெரிவிக்கும் உரிமை பாதுக்காக்கப்படும் எனவும் இதன் பின் பொதுமக்கள் மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் செய்திகளை பதிவு செய்வார்கள் எனவும் அரசு சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும் அவர்கள் வெளியிடும் செய்தி மலேசியர்களை பாதிக்கும் எனில் அவர்களும் இந்த சட்டத்தின் படி தண்டனை வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg