Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்பு நாடுக்கு ஆதரவாக ரஷ்ய தூதர்களை வெளியேற்ற அவுஸ்ரேலியாவும் முடிவு!

In
Updated: 06:42 GMT, Mar 27, 2018 | Published: 06:42 GMT, Mar 27, 2018 |
0 Comments
1170
This post was written by : Anojkiyan

பிரித்தானியா நட்பு நாடு என்ற அப்படையில் அதற்கு ஆதரவாக தெரிவிக்கும் வகையில், அவுஸ்ரேலியாவில் உளவு துறை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள இரு ரஷ்ய தூதர்களை வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் மல்கம் டர்ன்புல் அறிவித்துள்ளார்.

தலைநகர் கான்பெர்ராவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘வெளியுறவு அமைச்சர் மற்றும் நான் ரஷ்ய மக்களுடன் எந்தவொரு சர்ச்சையும் ஏற்படுத்தவில்லை என்பதை இதன்போது வலியுறுத்த விரும்புகிறேன்.

அத்தோடு ரஷ்யாவின் சைபீரிய நகரிலுள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆனால், எங்களது நட்பு நாடுகள் மீது இவ்வாறாதொரு அச்சுறுத்தல் தொடுக்கப்படும் போது அதனை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது’ என கூறினார்.

பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரஷ்ய உளவாளி மீது ரஷ்யா விஷ தாக்குதல் நடத்தியதாக பிரித்தானியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக பிரித்தானியாவில் நிலைகொண்டிருந்த ரஷ்ய தூதர்களை பிரித்தானியா வெளியேற்றியது.

இந்நிலையில் பிரித்தானியாவிற்கு ஆதரவான நாடுகளான அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகள் அவர்களின் நாட்டிலும் உள்ள ரஷ்ய தூதர்களை வெளியேற்றி வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே அவுஸ்ரேலியாவும் ரஷ்ய தூதர்களை வெளியேற்றியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg