Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

5ஆவது நாளாகவும் ஜேர்மன் சிறையில் கார்லெஸ் தடுத்துவைப்பு

In ஐரோப்பா
Updated: 11:40 GMT, Mar 29, 2018 | Published: 10:12 GMT, Mar 29, 2018 |
0 Comments
1116
This post was written by : Suganthini

கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Carles Puigdemont) இன்று (வியாழக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் ஜேர்மன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஸ்பெய்னுக்கு இவரை நாடு கடத்துவது தொடர்பாக, ஜேர்மன் நீதிமன்றம் கவனஞ்செலுத்தி வருகின்றது.

பின்லாந்துக்குச் சென்ற கார்லெஸ் புகிடமொன்ட், அங்கிருந்து டென்மார்க்குக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், டென்மார்க்கிலிருந்து பெல்ஜியத்துக்குச் செல்லும் வழியில் ஜேர்மனியில் அவர் கடந்த 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

கற்றலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு, கடந்த ஒக்டோபரில் நடத்தப்பட்டபோது, இதற்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததையடுத்து, கற்றலோனியாவுக்கான சுதந்திரப் பிரகடனத்தை கார்லெஸ் புகிடமொன்ட் அறிவித்தார். இதன் பின்னணியில், அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்திய ஸ்பெய்ன் அரசாங்கம், அவரைக் கைதுசெய்யவும் உத்தரவிட்டது. இதற்கிடையில், அவர் பெல்ஜியத்துக்கு தப்பிச்சென்ற நிலையில், கடந்த 4 மாதங்களாக அங்கு தங்கியிருந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg