Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: பிரித்தானியாவுக்கு சிறந்த எதிர்காலம்!

In
Updated: 10:48 GMT, Mar 29, 2018 | Published: 10:48 GMT, Mar 29, 2018 |
0 Comments
1193
This post was written by : Suganthini

பிரெக்சிற்றுக்குப் பின்னர், பிரித்தானியாவுக்குச் சிறந்த எதிர்காலம் ஏற்படுமென்று தாம் நம்புவதாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் அய்ர் (AYR) நகரிலுள்ள காஷ்மியர் (CASHMERE) தொழிற்சாலைக்கு இன்று (வியாழக்கிழமை) விஜயம் செய்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில், பிரித்தானியாவுக்குச் சிறந்த வாய்ப்புகள் கிடைக்குமென்று நாம் நம்புவதுடன், இதனால் எமது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்’ என்றார்.

மேலும், ‘பொருளாதாரப் பங்குடமை மற்றும் வர்த்தக ஏற்பாடுகள் தொடர்பாக, நாம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள நிலையில், சிறந்த உடன்பாட்டை எட்டுவோமெனவும் நம்புகின்றோம். இதனையடுத்து, உலகளாவிய ரீதியில்; எமது சந்தைகளை நாம் திறக்க நேரிடும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பிரெக்சிற்றுக்குப் பின்னர் ஸ்கொட்லாந்துக்கு கூடிய அதிகாரங்கள் கிடைக்குமெனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg