Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எகிப்து ஜனாதிபதி தேர்தல்: மீண்டும் ஆட்சியமைக்கிறார் அல் சிசி!

In உலகம்
Updated: 03:49 GMT, Mar 30, 2018 | Published: 03:49 GMT, Mar 30, 2018 |
0 Comments
1297
This post was written by : Suganthini

எகிப்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அப்தெல் ஃபட்டா அல் சிசி மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைக்கவுள்ளார்.

எகிப்தில் புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல், கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி சிசி 92 சதவீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதுடன், 23 மில்லியன் மக்கள் இவருக்கு வாக்களித்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளரான மௌஸா முஸ்தஃபா மௌஸா, 3 சதவீத வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளார்.

மேலும், இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 60 மில்லியன் மக்கள் தகுதி பெற்றபோதிலும், சுமார் 25 மில்லியன் மக்கள் தமது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

இந்தத் தேர்தல் முடிவு தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பை, எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி வெளியிட அந்நாட்டு தேசிய தேர்தல்கள் சபை தீர்மானித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு எகிப்திய ஜனாதிபதியாக முதற்தடவையாகப் பதவியேற்றிருந்த அப்தெல் ஃபட்டா அல் சிசி, எகிப்தின் 6ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg