Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த நிதியமைச்சர் திட்டம்!

In இலங்கை
Updated: 09:59 GMT, Mar 31, 2018 | Published: 04:15 GMT, Mar 31, 2018 |
0 Comments
1252
This post was written by : Yuganthini

வடக்கு மாகாணத்தில் 50 தொழிற்சாலைகளை உருவாக்கி அப்பகுதியிலுள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர், அங்கு மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நிதி நிறுவனங்கள் மக்களுக்கு கடன்களை வழங்கி அம்மக்களை மீளா கடனுக்கு கொண்டு செல்கின்றது என சுட்டிக்காட்டிய மக்கள், வங்கிகளின் மூலமாக வழங்கப்படுகின்ற கடன்களை கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோாிக்கை விடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் பொருட்டு ஆயிரத்து 500 மில்லியன் ரூபாய் நிதியில் 50 தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இப்பகுதியில் பால் உற்பத்தியை விருத்திசெய்யும் தன்மை காணப்படுவதால் அவ்விடயம் தொடர்பிலும் நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்” எனத் தொிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg