Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு – கிழக்கு பிறீமியர் லீக்: புதிய வீரர்கள் அறிமுகம்

In உதைப்பந்தாட்டம்
Updated: 04:21 GMT, Apr 1, 2018 | Published: 04:21 GMT, Apr 1, 2018 |
0 Comments
1240
This post was written by : poovannan

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள உதைப்பந்தாட்ட கழகங்களை உள்ளடக்கி இடம்பெறவுள்ள மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அணிகளின் வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

“வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் சுற்றுப்போட்டி – 2018” என்ற இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் வீரர்களுக்கான பயிற்சி சீருடைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது வீரர்களின் அறிமுகம் இடம்பெற்றதோடு, குறித்த வீரர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் செயலாளர் ப.ஞானராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அத்தோடு, மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg