Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய தேசியக் கட்சியில் துரித மாற்றம் வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க

In இலங்கை
Updated: 05:08 GMT, Apr 1, 2018 | Published: 04:05 GMT, Apr 1, 2018 |
0 Comments
1271
This post was written by : Yuganthini

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் காத்திரமான மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமானதென கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் சிறந்த பாதையின் கீழ் கொண்டுசெல்ல வேண்டுமானால் புதிய தலைமைகளின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைக்க வேண்டுமெனவும்   அவர் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், அதன் தலைமை மாற்றப்பட வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg