Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மானிடரை மீட்க உலகில் உதித்த கிறிஸ்துவின் ‘உயிர்ப்பின் திருநாள்’

In
Updated: 05:15 GMT, Apr 1, 2018 | Published: 05:15 GMT, Apr 1, 2018 |
0 Comments
1074
This post was written by : Risha

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழாவை உலகளாவிய ரீதியில் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில், உயிர்தெழுந்த ஞாயிறு தின நள்ளிரவு ஆராதனைகள் நேற்று இலங்கையிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

மானிடரை மீட்க உலகில் வந்து உதித்த கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர்ப்படைந்த நாளாக உலக வாழ் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ‘உயிர்ப்பின் திருநாளை’ இலங்கை வாழ் மக்கள் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.

இன்று அதிகாலை முதல் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் உயிர்ப்பின் திருநாள் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது உயிர்ப்பின் சாட்சியாக மெழுகுவர்த்தி ஏந்தி திருநாளை கிறிஸ்தவர்கள் மகிழ்வுடன் வரவேற்றனர். இதேவேளை அனைத்து தேவாலயங்களிலும் விசேட திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பானது, மனித சக்திகளால் கல்லைப் புரட்டி – காவலை மீறிக்கடந்து வரவில்லை. மாறாக நீதிக்கெதிரான பிரசாரங்களால் – உண்மைக்கு எதிரான மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதைகளால் கட்டிவைக்க முடியாத உண்மையின் உயிர்ப்பாகக் கருதப்பட வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg