Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார்லெஸின் கைதைக் கண்டித்து ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Updated: 05:53 GMT, Apr 1, 2018 | Published: 05:53 GMT, Apr 1, 2018 |
0 Comments
1119
This post was written by : Suganthini

கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Neumuenster) கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து, ஜேர்மனியிலுள்ள கற்றலோனியவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டென்மார்க்கிலிருந்து பெல்ஜியத்துக்குத் திரும்பும் வழியில், ஜேர்மனியில் கடந்த மார்ச் 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட கார்லெஸ் புகிடமொன்ட், அந்நாட்டிலுள்ள நொய்ம்ஸ்ரர் (Neumuenster) சிறைச்சாலையில் 8 நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச்சிறைச்சாலைக்கு முன்பாக நேற்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் 30 பேர், கார்லெஸ் புகிடமொன்ட் கைதுசெய்யப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன்போது, கற்றலோனியக் கொடிகளையும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் சிறைச்சாலை வேலியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொருத்தியுள்ளனர்.

கடந்த ஒக்டோபரில், கற்றலோனியாவில் நடத்தப்பட்ட சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததையடுத்து, கற்றலோனியாவுக்கான சுதந்திரப் பிரகடனத்தை கார்லெஸ் புகிடமொன்ட் அறிவித்திருந்தார். இதன் பின்னணியில், அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்திய ஸ்பெய்ன் அரசாங்கம், அவரைக் கைதுசெய்ய உத்தரவிட்டது. இதற்கிடையில், அவர் பெல்ஜியத்துக்கு தப்பிச்சென்ற நிலையில், கடந்த 4 மாதங்களாக அங்கு தங்கியிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg