Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியாமி ஓபன் டென்னிஸ்: சொந்த மண்ணில் சாதித்தார் சொலேன் ஸ்டெப்ஹன்ஸ்!

In டெனிஸ்
Updated: 06:09 GMT, Apr 1, 2018 | Published: 06:09 GMT, Apr 1, 2018 |
0 Comments
1125
This post was written by : Varshini

மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை சொலேன் ஸ்டெப்ஹன்ஸ் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி, நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இதில், லதிவியாவைச் சேர்ந்த ஜெலினா ஒஸ்டபென்கோவை வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை சொந்த மண்ணில் சாதனை படைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டில் சொலேன் ஸ்டெப்ஹன்ஸ் 7-6 (7-5) என்ற அடிப்படையில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் அதிரடி காட்டிய சொலேன் ஸ்டெப்ஹன்ஸ், இரண்டாவது செட்டை 6-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டார். இதன்மூலம், 7-6, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்க வீராங்கனை சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg