Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கற்பனைச் செய்து பார்த்த நான் தற்போது வெற்றியாளனாக நிற்கிறேன்: இஸ்னர் நெகிழ்ச்சி

In டெனிஸ்
Updated: 04:08 GMT, Apr 2, 2018 | Published: 04:08 GMT, Apr 2, 2018 |
0 Comments
1094
This post was written by : Anojkiyan

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரில் வெற்றியாளன் ஆவேன் என கற்பனைச் செய்து பார்த்த நான், தற்போது வெற்றியாளனாக நிற்கிறேன் என மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கனான ஒற்றையர் பிரிவில், சம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்ற இறுதிபோட்டியில், அமெரிக்க வீரர் ஜோன் இஸ்னர், ஜேர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்வை வீழ்த்தி முதல் முறையாக இத்தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த வெற்றியின் பின்னர் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “இந்த வெற்றியை நம்பமுடியாதுள்ளது. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. நான் இந்த தொடரில் விளையாடுவது குறித்து எப்போதும் கற்பனைச் செய்து பார்த்திருக்கிறேன். இன்று இந்த தொடரின் வெற்றியாளனாக இங்கு நிற்கிறேன்.

இங்கு வெற்றி பெற்றவனாய் இருப்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சியமாக இது என் வாழ்வில் மிகச் சிறந்த ஒரு தருணமாகும்.
நான் அமெரிக்காவில் சிறப்பான முறையில் விளையாடியுள்ளேன். அது எனக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg