Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லா லிகா: செவில்லா- பார்சிலோனா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு

In டெனிஸ்
Updated: 07:15 GMT, Apr 2, 2018 | Published: 07:15 GMT, Apr 2, 2018 |
0 Comments
1083
This post was written by : Anojkiyan

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து தொடரின், செவில்லா மற்றும் பார்சிலோனா அணிகளுக்கிடையிலான லீக் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

செவில்லா, சான்செஸ் கால்பந்து அரங்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டி, 2-2 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது.

உள்ளூர் இரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் சிறப்பாக விளையாடிய செவில்லா, 36வது நிமிடத்தில் முதலாவது கோலை அடித்தது. இந்த கோலை வாஸ்குவெஸ் அடித்தார். இதனையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தும் எந்த கோலும் அடிக்காத காரணத்தால், போட்டியின் முதல் பாதியில் செவில்லா அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் சிறப்பாக விளையாடிய செவில்லா அணி, 50வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடிக்க அணி 2-0 என முன்னிலை பெற்றது. ஆனால் எதற்கும் அசாராத பார்சிலோனா அணி கடுமையாக போராடி இறுதிகட்டத்தில் அடுத்தடுத்து இருகோல்களை அடித்து போட்டியை சமநிலை பெற செய்தது.

பார்சிலோனா அணிக்காக உறுதியுடன் போராடிய நட்சத்திர வீரர்கள் லூயிஸ் சுவாரெஸ் 88வது நிமிடத்திலும், லியோனல் மெஸ்ஸி 89வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மேற்கொண்டு எந்த கோலும் அடிக்காத காரணத்தால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg