Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலை பொலிஸின் வருடாந்தப் பரீட்சார்த்த நடவடிக்கை

In இலங்கை
Updated: 09:32 GMT, Apr 3, 2018 | Published: 09:32 GMT, Apr 3, 2018 |
0 Comments
1089
This post was written by : poovannan

திருகோணமலை மாவட்டத்தின் 11 பொலிஸ் பிரிவுகளுக்கான வருடாந்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. திருகோணமலை நகரின் கடற்கரைக்கு முன்பாக குறித்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.

திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

மேலும் பொலிஸ் நிலையத்தின் வாகனப் பிரிவினைப் பார்வையிட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அதன் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்விற்காக திருகோணமலை நகர கடற்கரைப் பகுதியில் உள்ள காந்தி சிலையில் இருந்து கோட்டை வாசல் வரையான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg