Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய அரச தம்பதியருக்கு அவுஸ்ரேலியாவில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு!

In
Updated: 07:35 GMT, Apr 4, 2018 | Published: 07:35 GMT, Apr 4, 2018 |
0 Comments
1120
This post was written by : Risha

அவுஸ்ரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது பாரியார் கமில்லா ஆகியோருக்கு தலைநகர் பிரிஸ்பேனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பிரித்தானிய அரச தம்பதியர் இன்று (புதன்கிழமை) அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

அங்கு இளவரசருக்கு இராஜ வணக்கம் செலுத்தப்பட்டு, அரச குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு பொறுப்பான ஆயுதமேந்திய படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.

தொடர்ந்து தலைநகரின் தாவரவியல் பூங்காவின் இரு மருங்கிலும் கூடிய ஆயிரக்கணக்கான நலன் விரும்பிகள் அரச தம்பதியரை வாழ்த்துக் கூறி வரவேற்றனர்.

பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் இன்று மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg