இரண்டாவது நாளாக தொடரும் ரயில்வே ஊழியர்களின் போராட்டம்: பயணிகள் அவதி
பிரான்ஸ் முழுவதும் ரயில் சேவைகளை இடைநிறுத்தி, ரயில்வே ஊழியர்களினால் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தொழிலாளர் சீர்திருங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே ஊழியர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் SNCF ரயில்வே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பெருமளவானோர் பங்கேற்றுள்ளதாக தெரியவருகின்றது.
ஓய்வூதிய மாற்றங்கள், மற்றும் புதிய பணியாளர்கள் நிலை உள்ளிட்ட மக்ரோனின் புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.