தலைகீழாக சுழன்ற ரொனால்டோ! : ஒட்டுமொத்த அரங்கத்தையே வியக்க வைத்த கோல்!

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால் இறுதிச் சுற்றுப் போட்டியில் ரொனால்டோவின் அதிரடி ஆட்டத்தினால் ரியல் மெட்ரிட் அணி 3 -0 என்ற கோல் கணக்கில் ஜுவெண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
நேற்று (புதன்கிழமை) இத்தாலியில் நடைபெற்ற குறித்த போட்டியில் ஆரம்பம் முதலாகவே ரொனால்டோ பம்பரமாகச் சுழன்று பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்படி போட்டியில் 3 ஆவது நிமிடத்திலேயே அசத்தலான கோல் ஒன்றை ரொனால்டோ அடித்து எதிரணியை ஸ்தம்பிக்கச் செய்தார். தொடர்ந்த 64 ஆவது நிமிடத்தில் ஒட்டுமொத்த அரங்கத்தையே அதிரவைக்கும் முகமாக Bycycle kick முறையிலான கோல் ஒன்றினை ரொனால்டோ அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
தலைகீழாக பாய்ந்து, இமைக்கும் நொடியில் ரொனால்டோ அடித்த அற்புதமான கோல் அரங்கத்தில் குவிந்திருந்த அனைவரின் கவனத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரொனால்டோ மேலும் ஒரு கோலை அடிக்க 3 -0 என்ற கணக்கில் ரியல் மெட்ரிட் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ரொனால்டோ மூன்று கோல்களை அடித்தார். இதன்மூலம் தொடர்ந்து 10 சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையினையும் ரொனால்டோ பெற்றுக் கொண்டார்.
இதேவேளை, குறித்த போட்டியில் ரொனால்டோ அடித்த அற்புதமான கோல் சமூக வலைத்தளங்கள் மூலம் வேகமாக பரவி வருவதோடு, பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Cristiano Ronaldo 2nd Amazing Goal vs Juventus.#HalaMadrid pic.twitter.com/mGmCbpGpDa
— Zeeshan (@FifaZeeshan) April 3, 2018