Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிசிறந்த தரத்திலான வாகனங்களின் கண்காட்சி!

In வணிகம்
Updated: 11:23 GMT, Apr 6, 2018 | Published: 11:23 GMT, Apr 6, 2018 |
0 Comments
1045
This post was written by : Risha

உலகில் தலைசிறந்த வாகன உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் அதிசிறந்த தரத்திலான வாகனங்களை வழங்குவதை இலக்காகக் கொண்ட ஒரே நிகழ்வான LB Big Wheels Motor Show கொழும்பில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 18,19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் கொழும்பு 7 தாமரைத் தடாகத்தில் மு.ப 10 மணிமுதல் பி.ப 10 மணிவரை இடம்பெறவுள்ளது.

இலங்கையில் புத்தம்புதிய மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட வாகன இறக்குமதியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அமைப்பான இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கையிலுள்ள மிகவும் நம்பிக்கைமிக்க நிதி நிறுவனங்களுள் ஒன்றான LB Finance ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த வாகன கண்காட்சியில் பல்வேறு வகையான சிறிய கார்கள், சொகுசு கார்கள், அனைத்து அளவுகளையும் கொண்ட SUV வாகனங்கள், வலுவான ஜீப்கள் மற்றும் சூப்பர்கார்கள் என பலதரப்பட்ட வாகனங்கள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் 35-இற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்களுடன், hybrid மற்றும் மின்சாரத்தில் இயங்குபவை உட்பட மொத்தமாக 200 இற்கும் மேற்பட்ட புத்தம்புதிய மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

ஐரோப்பா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் அவுஸ்ரேலியாவிலிருந்து அனைத்து முன்னணி தயாரிப்புக்கள் மற்றும் வடிவங்கள் நிகழ்வில் இடம்பெறவுள்ளன. வாகன ஆர்வலர்கள் மத்தியில் எப்போதும் பிரபலமான, நாட்டிலுள்ள மிகச் சிறந்த பழைய காலத்து கார்கள் சிலவற்றின் பரந்த தெரிவும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg