Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தர் யார்? – அவரை வழிபடுவது ஏன்?

In
Updated: 12:11 GMT, Apr 7, 2018 | Published: 12:11 GMT, Apr 7, 2018 |
0 Comments
1123
This post was written by : Puvanes

கௌதம புத்தர் அமைதியின் உருவாய் காணப்படுபவர், துன்பத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதில் இருந்து விடுபடும் யுக்தியையும், பௌத்தத்தையும் உலகிற்கு போதித்த புனிதர்.

என்றாலும் புத்தர் ஒரு கடவுளா என்றதோர் கேள்வி காணப்படுகின்றது.

புத்தர் கடவுள் இல்லை. அவர் தன்னைக் கடவுளாகவோ, அல்லது கடவுளின் மகனாகவோ, கடவுளின் தூதுவராகவோகூடப் பிரகடனம் செய்து கொண்டதில்லை.

புத்தர் தன்னைப் பூரணத்துவப்படுத்திக் கொண்ட ஒரு மனிதர். அவரைச் சான்றாக வைத்து, அவர் வழியைப் பின்பற்றினோமேயானால், நாமும் நம்மைப் பூரணத்துவப்படுத்திக் கொள்ளலாம்.

அவ்வாறானபோது அதாவது புத்தர் கடவுள் இல்லை என்றபோதிலும் அவரை மக்கள் வழிபதுவது ஏன்?

வழிபாடு பலவகைப்படும். யாராவது ஒருவர் ஒரு கடவுளை வணங்கும் போது, அது ஆண் கடவுளோ, பெண் கடவுளோ, அக்கடவுளைப் புகழ்ந்து பாடி, அக்கடவுளுக்குப் பல பொருள்களைப் படைத்துத் தமக்குச் சில சலுகைகளை வேண்டுவர்.

தமது பிரார்த்தனையைக் கடவுள் கேட்டுத் தாங்கள் படைத்த பொருட்களைக் கடவுளர் ஏற்றுக் கொண்டு, தங்கள் பிரார்த்தனைக்குப் பதில் தருவதாக அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், பௌத்தர்கள் இவ்வாறான பிரார்த்தனைகளில் ஈடுபடுவதில்லை.

அடுத்த வழிபாட்டு முறை யாதெனில், நாம் போற்றுபவருக்கோ, விரும்புபவருக்கோ நாம் அளிக்கும் மரியாதை ஆகும். ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழையும்போது எழுந்து நின்று மரியாதையளிக்கிறோம். மதிப்புக்குரியவர்களைச் சந்திக்கும்போது கை குலுக்குகின்றோம்.

ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்துநின்று வணங்குகின்றோம். இவையெல்லாம், நாம் மனிதர்களுக்கோ, பொருட்களுக்கோ காட்டும் மரியாதைக் குறிகளாகும். இவ்வகை வணக்க முறைகளையே பௌத்தர்கள் கடை பிடிக்கின்றனர்.

இரு கைகளையும் தன் மடியிலே வைத்துக் கொண்டு, புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கும் புத்தபெருமானின் சிலைகள், நம்மை அனைத்து உயிர் வாழ் இனங்களிடமும் அன்பையும், நம்மிடையே அமைதியையும், பாசத்தையும் வளர்த்துக் கொள்ளச் செய்கின்றன.

ஊதுபத்திகளிலிருந்து பரவும் வாசனை, ஒழுக்கம் உலகம் எங்கும் பரவ வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஒளிதரும் விளக்கு நமதறிவையும், மலர்ந்து மணம் வீசி அழியும் பூக்கள் மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் குறிக்கின்றன.

புத்தரை வணங்கும்போது அவருடைய போதனைகள் நமக்களித்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்துத்தப்படுகின்றது. அவையே பௌத்தர்களின் வழிபாட்டு முறைகளாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg