Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிக சத்தம்! – 110 கோடி பேர் பாதிப்பு

In
Updated: 12:25 GMT, Apr 7, 2018 | Published: 12:25 GMT, Apr 7, 2018 |
0 Comments
1108
This post was written by : Puvanes

அடுத்தவருக்கு தொந்தரவுகள் இன்றி பாடல்களை ஹெட்போன் மற்றும் இயர்போன்களின் உதவிகளுடன் கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்தநிலையில் இந்த ஹெட்போன்கள் மற்றும் இயர் போன்களின் பாவனையின் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 110 கோடி பேர் செவித்திறன் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில் சந்தையில் விற்கப்படும் தரம்குறைந்த ஹெட்போன்களின் பாவனையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஆய்வுகளின் அடிப்படையில் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்கும் போது அதாவது ஒரு மணித்தியாலத்திற்கு 85 டெசிபல் அளவிலும், 15 நிமிடங்களுக்கு 100 டெசிபல் அளவிலும் பாடல்களைக் கேட்கும் போது செவித்திறன் பாதிப்படையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அதிகமாக தரம் குறைந்த, அதிக சத்தத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டுவரும் ஹெட்போன்கள் சந்தையை நிரப்பியுள்ள நிலையில் அவை 120 டெசிபல் அளவினைச் சார்ந்தவைகள் எனவே அவற்றின் பாவனையினால் செவித்திறன் பாதிப்புகள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தரம்மிக்க ஹெட் – இயர்போன்களை பயன்படுத்துவதோடு. அதிக சத்தத்தில் பாடல்களைக் கேட்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg