Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பலமாகும் இரகசியங்கள் – பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு

In
Updated: 12:48 GMT, Apr 7, 2018 | Published: 12:48 GMT, Apr 7, 2018 |
0 Comments
1117
This post was written by : Puvanes

பேஸ் புக்கைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய அப்ளிகேஷன்களுக்கு தடை விதித்து பேஷ்புக் நிறுவனம் அதிரடித் தீர்மானத்தினை எடுத்துள்ளது.

பேஸ்புக்கை மையப்படுத்தி உருவாக்கப்படும் அப்ளிகேஷன்கள் பிரபல்யம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. உதாரணமாக “எந்த நடிகர் நடிகைகைப்போல் இருக்கின்றீர்கள், எதிர்காலத்தில் உங்கள் நிலை என்ன? 10 வருடத்தின் பின்னர் எப்படி இருப்போம்” என்ற பல சுவாரசியமான விடயங்களைக் காட்டும் வகையில் புதிய அப்ளிகேஷன்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறானவற்றின் மூலம் தனிநபரின் புகைப்படங்கள், மின்னஞ்சல் உட்பட பல விபரங்கள் கசிவடையும் சாத்தியக்கூறுகளும் நடைபெறுகின்றன.

தற்போது தனிப்பட்ட இரகசியங்கள், புகைப்படங்கள் கசிந்து வருவதன் காரணமாக பேஸ்புக் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதோடு, அதன் பாவனையாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் கசிவடைந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே பேஸ்புக் இந்த புதிய தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாக தனிநபர்களின் தகவல்கள் கசிவடைவதைத் தவிர்க்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg