Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிய பிரதமர்! – தயாசிறி புதுத் தகவல்

In இலங்கை
Updated: 14:20 GMT, Apr 7, 2018 | Published: 14:20 GMT, Apr 7, 2018 |
0 Comments
2535
This post was written by : Puvanes

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு, நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தொடர்பாக நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமருக்கு எதிராக வாக்களிக்கவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 4 முதல் 5 கோடிகள் வரை பணம் கொடுக்கப்பட்டு விலைக்கு வாங்கப்பட்டதாகவும் தயாசிறி கூறியுள்ளார்.

இந்த விடயத்தினை பணம் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னிடம் கூறியதாகவும், குறித்த உறுப்பினருக்கு இருந்த கடன் தொல்லை காரணமாகவே அந்தப் பணத்தினை பெற்றுக்கொள்ள நேர்ந்ததாக அவர் தன்னிடம் கூறியுள்ளதாகவும் தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கொடுக்கல் வாங்கல் விடயத்தில் சிலவேளை மத்திய வங்கி ஊழலில் தொடர்பு பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும், அவற்றினை கூடிய விரைவில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவதாகவும் தயாசிறி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg