Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் பயங்கரவாதத் தாக்குதல்: இருவர் உயிரிழப்பு!

In உலகம்
Updated: 03:36 GMT, Apr 8, 2018 | Published: 03:36 GMT, Apr 8, 2018 |
0 Comments
1151
This post was written by : Ravivarman

ஜேர்மன், முன்ஸ்ரர் (Munster) பகுதியில் பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மன் நேரப்படி நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் எனவும், அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாகவும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதுவொரு பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படுகின்ற போதிலும், உத்தியோகபூர்வமாக இதுவரையிலும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர் வாகனத்தின் சாரதி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உணவகம் ஒன்றிற்கு அருகில் வீதியில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர்கள் மற்றும் உணவு பெற்றுக் கொண்டிருந்தவர்கள் மீதே குறித்த வாகனம் மூர்க்கத்தனமாக மோதியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தினையடுத்து அந்தப் பகுதியில் பொலிஸாரினால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஹெலிகொப்டர்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இத்தாக்குதல் தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் தாக்குதலிற்குத் தயாராக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை 2016 ஆம் ஆண்டு பேர்லின் நகரில் இதேபோன்ற பாரிய வாகனத் தாக்குதல் இடம்பெற்றதுடன், அதில் 12 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg