Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் விமானத் தாக்குதல்: 8 குழந்தைகள் உயிரிழப்பு!

In உலகம்
Updated: 03:53 GMT, Apr 8, 2018 | Published: 03:53 GMT, Apr 8, 2018 |
0 Comments
1099
This post was written by : Ravivarman

சிரியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் எட்டுக் குழந்தைகள் உள்பட 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் உள்ள டவுமா நகரில் நேற்று கிளர்ச்சியாளர்களை குறிவைத்தே சிரிய இராணுவத்தினரால் குறித்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர் என சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அஸாருக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்களை ஒடுக்கும் பணியில் இராணுவத்தினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் இதுவரை இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg