Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் இரசாயனத் தாக்குதல்: 150 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

In உலகம்
Updated: 05:19 GMT, Apr 8, 2018 | Published: 05:19 GMT, Apr 8, 2018 |
0 Comments
1188
This post was written by : Ravivarman

சிரியாவின், கிழக்கு கௌட்டாவில் நடத்தப்பட்ட நச்சு வாயுத் தாக்குதலில் சுமார் 150 பேர்வரையில் உயிரிழந்திருக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு கௌட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயுத் தாக்குதலிலேயே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரசாயனத் தாக்குதல் நடத்தியதாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிரிய அரசு, அவை உண்மையான தகவல்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்துத் தெரிவிக்கையில், தாக்குதல்களில் இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், சிரிய அரசுடன் இணைந்து போராடும் ரஷ்யாதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறியுள்ளது.

இதேவேளை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்டதாக கூறப்படும் உருளை குண்டில் ´சரின்´ எனப்படும் நச்சு இருந்ததாகவும், கௌட்டா ஊடக மையம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg