Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிஃபா உலகக் கிண்ணத்திற்கு பனாமாவில் அமோக வரவேற்பு

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:12 GMT, Apr 8, 2018 | Published: 06:12 GMT, Apr 8, 2018 |
0 Comments
1160
This post was written by : Varshini

பிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து தொடரை முன்னிட்டு உலகை வலம் வரும் பிஃபா கிண்ணம், பனாமாவுக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

பிஃபா உலகக் கிண்ணத் தொடரில், பனாமா முதற்தடவையாக இம்முறை பங்குபற்றவுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டைச் சென்றடைந்த பிஃபா கிண்ணத்தை அந்நாட்டு மக்கள் ஆவலோடு கண்டுகளித்தனர். தமது நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கிண்ணத்திற்கு, பாரம்பரிய நடனத்துடன்  அமோக வரவேற்பளித்தனர்.

இதன்போது, பிரான்சின் முன்னாள் நட்சத்திர வீரர் David Trezeguetஇடமிருந்து பனாமா நாட்டு ஜனாதிபதி Juan Carlos Varela கிண்ணத்தைப் பெற்று பின்னர் ஒப்படைத்தார். இதன்போது பனாமா ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது. பனாமாவில் கிடைத்த வரவேற்புக்கு இதன்போது David Trezeguet நன்றி தெரிவித்தார்.

பனாமாவைத் தொடர்ந்து பிஃபா கிண்ணம் கொஸ்டரிக்கா, மெக்சிக்கோ, அமெரிக்கா, ஜேர்மனி, மொங்கோலியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

ரஷ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15ஆம் திகதிவரை பிஃபா உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு உலக நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படும் பிஃபா கிண்ணம், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி ரஷ்யாவை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg