Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியா அகதிகளை ஏற்பதற்கு மியன்மார் தயாரில்லை: ஐ.நா.

In
Updated: 07:15 GMT, Apr 8, 2018 | Published: 07:15 GMT, Apr 8, 2018 |
0 Comments
1221
This post was written by : Ravivarman

இடம்பெயர்ந்த ரோஹிங்கியா அகதிகளை திரும்பவும் ஏற்றுக் கொள்வதற்கு மியன்மார் அரசாங்கம் தயாராக இல்லை என ஐ.நா.வின் உதவிச் செயலாளர் உர்சுலா முல்லர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் ராகினின் மாநிலத்திற்கு ஆறு நாள் விஜயம் மேற்கொண்ட அவர் நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘மியான்மார் வன்முறைகளில் குறைந்தது 55 கிராமங்கள் குண்டு வீசி முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

எனினும் ஓகஸ்ட் மாதம் முதல் மொத்தமாக 362 கிராமங்கள் பகுதி அல்லது முற்றிலுமாக அழிந்துவிட்டதாக நியூயோர்க்கை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கின்றது.

கிட்டத்தட்ட 700,000 முஸ்லிம்கள் பங்களாதேஷூக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைச் சொந்த இடங்களுக்குத் திருப்பி அழைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு முகாம்கள் சரிவர இயங்கவில்லை. மியன்மார் அரசாங்கமும் பங்காளதேஷ் அரசாங்கமும் உடன்பட்டதன்படி எல்லையில் அமைக்கப்பட்ட முகாம்கூட முறையாகப் பேணப்படவில்லை’ என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg