Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்!

In
Updated: 10:53 GMT, Apr 8, 2018 | Published: 10:03 GMT, Apr 8, 2018 |
0 Comments
1518
This post was written by : Anojkiyan

இந்தியாவின் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பல்வேறு தரப்பாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும், மத்திய அரசை கண்டித்தும் லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் புத்தாண்டு தினமான எதிர்வரும் 14 ஆம் திகதி, லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம், லண்டன் நேரப்படி மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இதற்காக தற்போது லண்டன் வாழ் தமிழர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg